இந்த வாரம் என்ன?
நவ.25 - கார்த்திகை 9 சனி
● திருவோணம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
● திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
நவ. 26 கார்த்திகை 10 ஞாயிறு
● அஷ்டமி விரதம், பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்
● மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம்
● கரிநாள்
நவ. 27 கார்த்திகை 11 திங்கள்
● சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
● நவமி. ராமருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
● திருநெல்வேலி நெல்லையப்பர் தர்பார் காட்சி
நவ. 28 கார்த்திகை 12 செவ்வாய்
● திருவண்ணாமலை சிவன் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் எழுந்தருளல்
நவ. 29 கார்த்திகை 13 புதன்
● முகூர்த்த நாள்
● ஏகாதசி விரதம் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
● திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தேர்
நவ. 30 கார்த்திகை 14 வியாழன்
● முகூர்த்த நாள்
● கைசிக ஏகாதசி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் அலங்கார திருமஞ்சனம்
டிச. 1 கார்த்திகை 15 வெள்ளி
● பரணி தீபம்
● பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
● திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்