டிச.,14 க்கு பிறகு சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :2899 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புஅருகே உள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல மாதத்தில் 4 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக டிசம்பர் மாதத்திற்கான 4 நாட்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக டிசம்பர் 14, 15, 16,17 ஆகிய தேதிகளில் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.