உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைபவம்

கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைபவம்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில் விழா நடக்கிறது. இதில் கடந்த, 3ல் குண்டம் இறக்கும் நிகழ்ச்சி, தேரோட்டம் நடந்தது. நேற்று பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. சின்னமாரியம்மன் கோவில் பின்புறம் ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கருங்கல்பாளையம், திருநகர் காலனி, கிருஷ்ணம் பாளையம், ஓம்காளியம்மன் கோவில் வீதி, காவிரிக்கரை பகுதி களை சேர்ந்த திரளான மக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !