உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பார்ப்பு நிறைவேறும்

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பார்ப்பு நிறைவேறும்

சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 4-ல் இருக்கும் ராகு, 6-ல் இருக்கும் செவ்வாய் சாதகமாக நின்று தொடர்ந்து நன்மையளிப்பர். சுக்கிரன் டிச.21-க்கு பிறகும், புதன்  ஜன.4-க்கு பிறகும் தனுசு ராசியில் இருந்து நற்பலன் கொடுப்பர்.  ராசிக்கு 7-ல் இருந்த சனிபகவான் டிச.19-ல் 8-ம் இடத்திற்கு செல்கிறார். முயற்சியில் தடைகளை உருவாக்குவார். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம்.  சிலர் ஊர் விட்டு, ஊர் செல்லும் நிலை உருவாகும். இருப்பினும் ராகுவால் செயலை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும்.  பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.  ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு.  பெண்களால் மேன்மை கிடைக்கும். உங்கள் மீதான அவப்பெயர் டிச.21- க்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் போகும். அதன் பின் செல்வாக்கு பெருகி,  தேவைகள் பூர்த்தியாகும்.

செவ்வாயால் புதிய வீடு, -மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சுக்கிரன் டிச.21க்கு பிறகு, சாதகமாக இருப்பதால் ஆடம்பர பொருள் வாங்கலாம். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.  குறிப்பாக டிச. 30,31-ல் அவர்களால் கூடுதல் நன்மை பெறுவீர்கள். டிச.26,27-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  ஜன. 5,6,7-ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஜன.4க்கு பிறகு முயற்சியில் வெற்றி உண்டாகும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.  கணவன், -மனைவி இடையே ஜன.4 வரை கருத்துவேறுபாடு உருவாகலாம். ஆனால், அதன் பின் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.  தொழில், வியாபாரத்தில் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு டிச.21- க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள்  தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர்.   பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் அதிகரிக்கும்.  

அரசு வகையில் சாதகமான நிலை காணப்படவில்லை.  எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்து கொள்ளவும். ஜன.10,11-ல் எதிர்பாராத  வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அலைச்சல், வேலை பளு அதிகரிக்கும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.  பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் மேற்கொள்ளலாம்.  புதன் சாதகமாக இருப்பதால் மாத இறுதியில் நன்மையை எதிர்பார்க்கலாம்.  ஜன.4-க்கு பிறகு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு.   

கலைஞர்கள்  டிச.21- வரை சுக்கிரன் சாதகமற்ற நிலையில் காணப்படுவதால் கடுமை யாக உழைக்க வேண்டியதிருக்கும். அதன் பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காணலாம்.  

மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோனையை பின்பற்றுவது நல்லது. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில்  விட்டுக் கொடுத்து போகவேண்டியதிருக்கும். சிலர் திடீர் பொல்லாப்பை சந்திக்கலாம். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. டிச.21க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  மேல் அதிகாரிகளின் ஆதரவு  இருக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.  2018  ஜன.4- க்கு பிறகு  சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிச.16,17, ஜன.12,13-  எதிர்பாராத நன்மை கிடைக்க பெறுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  

* நல்ல நாள்:  டிச.16, 17, 23, 24, 25, 26, 27, 30, 31,  ஜன.3, 4, 10, 11, 12, 13
* கவன நாள்: டிச 18, 19, 20 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 7, 9          நிறம்:  சிவப்பு, நீலம்

* பரிகாரம்:
●  தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை
●  மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை
●  விநாயகருக்கு நெய் தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !