உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையத்தில் லட்சார்ச்சனை விழா நாளை துவக்கம்

குமாரபாளையத்தில் லட்சார்ச்சனை விழா நாளை துவக்கம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தாரின் லட்சார்ச்சனை விழா, நாளை நடக்கிறது. குமாரபாளையம், நாராயண நகர், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 20ம் ஆண்டு சிறப்பு லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி ஆகியவை, நாளை, அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் நடக்கிறது. அதிகாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கவுள்ளது. லட்சார்ச்சனை விழாவை, தஞ்சை ஸ்ரீமத்சுவாமி கிருஷ்ணானந்த், குமாரபாளையம் ஐயப்ப பக்தர்கள் குழுவை சேர்ந்த ஈஸ்வர குருசாமி துவக்கி வைக்கின்றனர். 18 கட்டங்களாக நடக்கிறது. பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை, சங்க செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !