உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலி வாகனத்தில் ஐயப்பன் திருவீதியுலா

புலி வாகனத்தில் ஐயப்பன் திருவீதியுலா

அன்னுார் : அன்னுாரில் ஐயப்பன் கோவில் திருவிழாவில், யானையுடன் சுவாமி திருவீதியுலா நடந்தது. அன்னுார், நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன் கோவிலில், 48ம் ஆண்டு ஐயப்பன் திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டு நாட்கள் மூன்று கால ேஹாம பூஜைகள் நடந்தன. 19ம் தேதி மகா கணபதி ேஹாமமும், ஐயப்பனுக்கு, பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிேஷகமும் செய்யப்பட்டது. மதியம், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன் தினம் மாலை, கோவிலிலிருந்து யானை, செண்டை மேளம், ஜமாப் குழு மற்றும் ஐயப்ப பக்தர்களின் பஜனையுடன், புலி வாகனத்தில் ஐயப்பன் அமர்ந்து, சப்பரத்தில் திருவீதியுலா வந்தார்.தென்னம்பாளையம் ரோடு, எக்சேஞ்ச் ரோடு, கோவை ரோடு என முக்கிய சாலைகளின் வழியாக வந்த, ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து, ஐந்தாம் கால ேஹாம பூஜையுடன், விழா கொடி இறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !