உடுமலை கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
ADDED :2863 days ago
உடுமலை: உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம் கடைபிடிக்கப்படுகிறது. சிவனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. உடுமலை தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் முத்தையாபிள்ளை சக்தி விநாயகர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதனையொட்டி சிவனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.