உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3): மாதம் முழுக்க நன்மை

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3): மாதம் முழுக்க நன்மை

பிறர் நன்மையை பெரிதென எண்ணும் மிதுன ராசி அன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதன் ஜன. 22-ல் இருந்து பிப்.6-வரை சாதகமான நிலையில்  இருந்து நற்பலனை கொடுப்பார். அதன் பிறகு இடம் மாறி சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை வேண்டாம். காரணம்... சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். மேலும் செவ்வாய் ஜன.20-ல் சாதகமான நிலைக்கு வந்து நற்பலன் கொடுப்பார். இதனால் பொருளாதார வளம் அதிகரிக்கும்.

பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை, -ஆபரணங்கள் வாங்கலாம். புதனால் ஜனவரி 22-ல் இருந்து பிப்.6- வரை உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். எடுத்த செயல் வெற்றி அடையும். அதன் பிறகு அவர் தரும் பலன்கள் படிப்படியாக குறையும். இந்தக் கட்டத்தில் பொறுமையுடன் இருக்கவும். யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.

இம்மாதம் வசதிகள் பெருகும். மன உளைச்சலும், உறவினர் வகையில் இருந்த வீண் பகையும் மறையும்.  கணவன்,- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும். ஜன. 29,30ல் விருந்து விழா என சென்று வருவீர்கள்.  பொருளாதார வளம் மேம்படும். சகோதரர்களால் பணவரவு உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. ஜன.24,25-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்ரவரி 4,5-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ராகு தொழில் விருத்தியை தந்து கொண்டு இருக்கிறார். அவரால் உங்கள் ஆற்றல் மேம்படும். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால்  அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்  ஜன.14  பிப்.8,9,10ல் அபரிமிதமான லாபம் இருக்கும். போட்டியாளர்களை சமாளித்து வெற்றியடைவீர்கள். ஜன.26,27,28,31, பிப்.1-ல் சில தடைகள் வரலாம்.

அந்நாட்களில் வரவு, செலவை நீங்களே நேரடியாகக் கண்காணியுங்கள். பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.  பிரச்னைகள் வந்தாலும், குருவால் இருக்கும் இடம் தெரியாமல் போகும். ஜனவரி 22,23-ல் உன்னதமான பலன்கள் நடக்கும். எதிலும் வெற்றி காணலாம். ஜன. 21-க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். வசதிகள் பெருகும். சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.

ஜனவரி19க்கு பிறகு புதிய பதவி பெற வாய்ப்பு இருக்கிறது. பிப்.6,7-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு குரு பக்கபலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி காணலாம். சிறந்த மதிப்பெண்ணும், மதிப்பும் கிடைக்கும்.

போட்டிகளில் வெற்றி காணலாம். மாதக்கடைசியில் படிப்பில் மிகவும் கவனம் செலுத்தவும். விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். விளைச்சல், வருமானம் உயரும். புதிய சொத்து வாங்கும் நிலை உருவாகும். இதுவரை இருந்த தொய்வு நிலை மாறும்.  கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு கணவன், குடும்பத்தாரிடம்
நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.   

* நல்ல நாள்: ஜன. 14,15,16,22,23,24,25,29, 30, பிப். 2,3,8,9,10,11,12.
* கவன நாள்: ஜன.17,18,19 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 5,7  நிறம்: வெள்ளை , மஞ்சள்

* பரிகாரம்:
● காலையில் சூரிய நமஸ்காரம்.
● செவ்வாயன்று கேதுவுக்கு அர்ச்சனை.
● வெள்ளியன்று நாக தேவதை வழிபாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !