உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சமயபுரம் பக்தர்கள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் மாலையணிந்து செல்வது வழக்கம்.  அதன்படி, இந்தாண்டு மாலையணிந்த பக்தர்கள், நேற்று பகல் 12:00 மணியளவில், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் அமர்ந்து, மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, ஜெகமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !