அருணாசலேஸ்வரர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
ADDED :2818 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, முதலாமாண்டு நிறைவு விழா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த ஆண்டு பிப்., 6ல், ரோகிணி நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இந்நிலையில், நட்சத்திரத்தின் அடிப்படையில், ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து சம்பத்ரா அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலை, முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இன்று(ஜன27ல்) இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. பின், புனித கலச நீரில், மூலவரான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், உற்சவ மூர்த்திகளான விநாயகர், சந்திரசேகரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.