உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா கோலாகலம்

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா கோலாகலம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நடந்தது. கோயிலில்  ஜன. 18ல் கொடியேற்றத்துடன்  தொடங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.

காலை ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில்  சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை  எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பம் மூன்று சுற்றுக்கள் சுற்றி வந்தது.  கோயில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி,  கண்காணிப்பாளர் கல்யாணி, பேஷ்கார் சாந்தி, மணியம் புகழேந்தி, பணியாளர்கள் பங்கேற்றனர். தெப்பக்குளம் வறண்டால்,  தெப்பத்திருவிழாவிற்காக தண்ணீர் நிரப்ப அருகி்ல் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக மழைியன்றி ஆழ்குழாயிலும்  தண்ணீர் வெகுவாக குறைந்தது. தெப்பம் சுற்றிவரும்  அளவிற்கு தண்ணீர் நிரம்ப முடியவில்லை. இதனால் 2016ல் ஒரு சுற்று மட்டும், கடந்த  ஆண்டு நிலைத்தெப்பமாக திருவிழா நடந்தது.  இந்த ஆண்டு பெய்த லேசான மழையால்,  ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்திற்குள் மூன்றுமாதம்  தண்ணீர் நிரப்பப்பட்டது. அதனால் இந்த ஆண்டு தெப்பம் தண்ணீரில் சுற்றி வந்தது. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !