இப்படியும் ஒரு பக்தர்
ADDED :3203 days ago
பொன்னை விரும்பும் பூமியிலே.... என்னை விரும்பும் ஓருயிரே என்றொரு பாடல் உண்டு. அந்த பாடலின் கருத்தை பரிபாடலில் கடுவெயின் இளநாகனார் என்னும் புலவர், அந்த காலத்திலேயே பாடியிருக்கிறார். அவர் கேட்கும் வரத்தை பாருங்கள். முருகா... நாங்கள் உன்னிடம் பொன்னோ, பொருளோ, சுகமோ கேட்கவில்லை. உன் மீது என்றும் மாறாத அன்பும், அருளும் வேண்டுகிறோம். கடம்ப மலர் மாலை சூடியவனே! எப்போதும் உன் திருவடியை வணங்கும் பாக்கியம் தர வேண்டும் என்கிறார். அன்பு செலுத்தும் அனைவருக்கும் தன்னையே தரும் வள்ளலாக முருகன் விளங்குகிறார்.