உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலோக சிந்தாமணி

பூலோக சிந்தாமணி

பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில், காவடி வழிபாடு சிறப்பானது. காவடி சுமக்கும் பக்தர்கள், மார்கழி முதல் தேதி மாலை அணிந்து, தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வர். பூசத்திற்கு சிலநாள் முன்னதாக, பாத யாத்திரையாக புறப்படுவர். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை, காவடியில் சுமந்து செல்வர். தைப்பூச விரதமிருந்தால், விருப்பம் எளிதில் நிறைவேறும் என்பர். விரும்பியதை தரும் தேவலோக சிந்தாமணி போல, பூலோக சிந்தாமணியாக, பழநி முருகன் விளங்குவதாக அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். உப்பை நம்பவில்லை!உன்னையே நம்புகிறேன் முருகன் அடியாரான பாம்பன் சுவாமி, சென்னையில்வாழ்ந்தார். ஒருநாள் அவர் சாலையில் நடந்து செல்லும் போது, குதிரை வண்டி மீது மோதி கால் எலும்பு முறிந்தது. அவர் உண்ணும் உணவில் உப்பு சேர்ப்பதில்லை என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்பு சத்து குறைபாடு இருப்பதால், எலும்பு மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.படுக்கையில் கிடந்த பாம்பன் சுவாமிகள், முருகா...! நான் உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன் என, தான் எழுதிய சண்முக கவசத்தை பாடி வந்தார். நாளடைவில் மருத்துவர்களே வியக்கும் விதத்தில், அவரது எலும்பு முறிவு குணமானது. எந்த கடவுளும் கந்தக் கடவுளுக்கு மிஞ்சாது என்பது பாம்பன் சுவாமியின் அருள்வாக்கு. நோயால் அவதிப்படுவோர் குணம் பெற, 48 நாள் சண்முக கவசத்தை பக்தியுடன் படிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !