பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் உற்சவம்
ADDED :2844 days ago
பெருநகர், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், தைப்பூச விழாவையொட்டி, அறுபத்து மூன்று நாயன்மார்களின் மகா உற்சவம், நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச விழா, கடந்த, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாட்களாக, பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 27ல், திருக்கல்யாணமும், 28ல் ரதோற்சவமும் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரருடன், 63 நாயன்மார்கள், அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து, முக்கிய தெருக்களில் வீதியுலா வந்தனர். சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், தீபம் ஏற்றி வழிபட்டனர்.