உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரன்குன்றத்தில் தைப்பூச நிகழ்ச்சிகள்

குமரன்குன்றத்தில் தைப்பூச நிகழ்ச்சிகள்

குமரன்குன்றம் முருகன் கோவிலில், தைப்பூச நாளான இன்று, பால்குடம், பால் காவடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.சென்னை, குரோம்பேட்டை அடுத்த குமரன்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. காலை, 9:00 மணிக்கு, விநாயகர் பூஜை, 9:30 மணிக்கு பால்குடம் மற்றும் பால் காவடிகள், குமரன் குன்றம் அருணகிரிநாதர் அரங்கத்திலிருந்து புறப்பட்டு, மலையை சுற்றி கிரிவலம் வந்து, கோவிலை சென்றடையும். காலை, 11:00 மணிக்கு, பால்குடம் மற்றும் பால் காவடி ஆகியவற்றால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு, தீபாராதனையும் அதை தொடர்ந்து, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், ராதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !