வெயிலால் தேவிபட்டினம் நவபாஷாணம் வரும் பக்தர்கள் குறைவு
ADDED :2886 days ago
தேவிபட்டினம்: தற்போது வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் நவபாஷாணம் வரும் பக்தர்கள் குறைந்துள்ளனர். தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருவதால் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தர்பணம், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்கு பரிகார பூஜை செய்யப்படுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். தற்போது நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள வெயில் தாக்கம், பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்த அளவில் உள்ளது.