அமராவதியில் புத்தர் கோவில்
ADDED :2881 days ago
திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர், அமராவதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அமராவதியை சுற்றி, பழங்காலத்தில், புத்த மடாலயங்களும், ஸ்துாபிகளும் அதிக அளவில் இருந்தன. அதனால், அங்கு புத்தர் கோவில் கட்ட, ஆசிய நாடான, தாய்லாந்தைச் சேர்ந்த குழு ஒன்று முடிவு செய்தது. இதற்கு நிலம் ஒதுக்கும்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, அந்த குழுவினர் சந்தித்து, கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, அமராவதியில், 10 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக, முதல்வர், சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார்.