திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஹயக்ரீவர் ஹோமம்
ADDED :2829 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்படுவதற்காகநடந்த ஹயக்ரீவர் ேஹாமத்தில் மாணவர்கள் பங்கேற்றனர்.10,11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நடந்த சிறப்பு ஹயக்ரீவர் ேஹாமம்காலை 9:00 மணிக்கு வெங்கடேஷ் பட்டாச்சார்யர் தலைமையில் பட்டாச்சார்யர்கள் துவக்கினர். வாஸ்து சாந்தி,நவக்கிரக ேஹாமம், ஹயக்ரீவர் ேஹாமம் நடந்தது. பின்னர் புனிதக்கலசங்களில் உள்ள நீர் பங்கேற்ற மாணவர்கள் மீது தெளிக்கப்பட்டது. பூஜிக்கப்பட்ட பேனா, நோட்டுகள் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பொறுப்பாளர் ராஜகோபால், கிறிஸ்துராஜா மெட்ரிகுலேசன் நிறுவனர் விக்டர், எஸ்.எஸ்.ஏ.கல்லுாரி தலைவர் சந்திரசேகரன், குளோபல் இன்டர்நேசனல் பள்ளி நிறுவனர் காந்தி, தலைமையாசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.