உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்

திருமலையில் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்

திருப்பதி : திருமலையில், பிப்., 13ல், மூத்த குடிமக்களுக்கும், அதற்கு அடுத்த நாள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும், இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு, மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, வரும், 13ல், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை, 10:00 மணிக்கு, 1,000 பேர், பகல், 2:00 மணிக்கு, 2,000 பேர், மாலை, 3:00 மணிக்கு, 1,000 பேர் என, 4,000 பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்களை, திருமலையில் அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் பிப்.14ல், 9:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, 0 - -5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !