மேல்மலையனூர் கோவிலில் தீயணைப்பு அலுவலர் ஆய்வு
ADDED :2815 days ago
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஆய்வு நடத்தினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து நடந்ததை முன்னிட்டு, மாசி திருவிழா நடந்து வரும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவர் ஜெகதீஷ் நேற்று ஆய்வு நடத்தினார். தீ விபத்தை தடுக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீப்பிடிக்காத கொட்டகை அமைக்கவும், தீயை அணைக்க எடுப்பதற்கு வசதியாக மண்ணை சேமிக்கவும், சமையல் செய்யும் சிலிண்டர்களை பாதுகாப்பாக கையாளவும், மின்-சப்ளை ஒயர்களை கண்காணிக்கவும், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு வசதியாக கடைகளை அமைத்துக்கொள்ளவும், கோவில் நிர்வாகத்தை அறிவுறுத்தினார். மேல்மலையனுார், திண்டிவனம் மற்றும் செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்தானகுமார், பாபு, ஆதி ஆகியோர் உடனிருந்தனர்.