உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்வில் அதிக மதிப்பெண் பெற கோயிலில் யாகம்

தேர்வில் அதிக மதிப்பெண் பெற கோயிலில் யாகம்

விருதுநகர் : மாவட்டத்தில் தேர்வு எழுதும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மாவட்டம் கல்வியில் முதலிடம் பெற ஸ்ரீ ஆஞ்சநேய பக்தஜன சபை டிரஸ்ட் சார்பில் விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கல்விக்கடவுள் ஸ்ரீ ஹயக்ரீவர்க்கு சிறப்பு பூஜை, யாகம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட பேனா, பென்சில், கயிறு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !