விளாச்சேரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :2822 days ago
திருநகர், மதுரை விளாச்சேரி பூமிநிலா சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் விளக்கு பூஜையும், நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்கள், உற்ஸவர்களுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலையில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார். மேற்கு தாசில்தார் பாலாஜி, ஆர்.ஐ., மாதவன், வி.ஏ.ஓ., கார்த்திக் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகிகள் குணசேகரன், ஆறுமுகம், ராமலிங்கம் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.