உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லூர் முடுவார்பட்டியில் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் முடுவார்பட்டியில் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியில் காமாட்சி அம்மன், காஞ்சரடி கழுவடி சுவாமிகள்
கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி மூன்று நாட்களாக விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, கோபூஜை, யாகசாலை பூஜை கள் நடந்தன.

(பிப். 26) புனித தீர்த்த கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் மங்கள இசையுடன்
புண்ணிய தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்ற
கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !