திருவொற்றியூர் திருக்கல்யாணம் காண தண்டாயுதபாணி வருகை
ADDED :2824 days ago
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவம், 20ம் தேதி துவங்கி, மார்ச், 2ம் தேதி வரை நடக்கிறது. (பிப். 26), தேரோட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக, மண்ணடி பவளக்கார தெருவில் இருந்து தண்டாயுதபாணி சுவாமிகள், (பிப். 25) காலை, வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக புறப்பட்டார். இந்த ரதம், திருவொற்றியூர், தெற்குமாட வீதியில் உள்ள நகரத்தார் மண்டபத்தில், நான்கு நாட்கள் தங்கி, 28ம் தேதிநடக்க இருக்கும் திருக்கல்யாணத்தை கண்டு களித்து, மறுநாள் மதியம், மண்ணடிக்கு, தண்டாயுதபாணி சுவாமிகள் திரும்புவார்.