உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வார்த்தையே வாழ்க்கை

வார்த்தையே வாழ்க்கை

வாஸ்து தேவர்களை படைத்த சிவன், உயிர்களை ‘தீர்க்காயுசுபவ’ என வாழ்த்தும்படி பணித்தார். அவர்களும் அவ்வாறே  செய்தனர். இதனிடையே பூமியில் மக்களும், ‘தீர்க்காயுசுபவ’ என்றே வாழ்த்துவதை கண்ட வாஸ்து தேவர்களின் தலைவர், “மக்கள் தீர்க்காயுசுபவ என வாழ்த்துவதால், நாம் அப்படி கூறாமல், ‘தத்தாஸ்து’ (அப்படியே ஆகட்டும்) என கூறுவோம்,“ என்றார்.  ஒரு வீட்டில் சண்டையின் போது கணவனை, ‘நீ நாசமா போ,’ என்றாள் மனைவி. வாஸ்து தேவர்கள் ‘தத்தாஸ்து’ என்றனர். மனைவி சொன்னது போல நடந்து விட்டது. வாழ்க்கையில் மங்கள வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. ரா.ஜெயராமன் 95668 87446


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !