உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா

கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் 2005 மார்ச் 13 அன்று  திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 13வது ஆண்டு பிரதிஷ்டை தின விழாவை முன்னிட்டு வல்லபை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலையில் கணபதி ஹோமமும், காலை 10:00 மணிக்கு மூலவர்கள் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்ச மாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. வேதமந்திர பாராயணம், பஜனை, நாமாவளியினை பக்தர்கள் பாடி வழிபட்டனர்.  அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !