கடலிலே புடிச்சு தள்ளுங்க!
ADDED :2800 days ago
திருதராஷ்டிரனின் தம்பியான விதுரர் நீதி தவறாதவர். அண்ணனின் பிள்ளைகளான கவுரவர்கள், நீதிக்கு புறம்பாக செயல்பட்ட போது கண்டித்தார். தன் தாயைப் பற்றி தரக்குறைவாக பேசியதற்காக, போரில் துரியோதனன் பக்கம் நில்லாமல் ஒதுங்கி கொண்டவர். பிறர் மனம் புண்படாமல் அழகாகப் பேசும் இவருக்கு ஒரு சமயம், கொஞ்சம் கடினமாக பேசும் சூழல் எழுந்தது. இவரது கருத்துக்கள் ‘விதுர நீதி’ என்ற நூலாக தொகுக்கப்பட்டது. அதில் இரண்டு பேரை பாறாங்கல்லை கட்டி கடலில் போட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அவர்கள் யார் தெரியுமா? பணம் இருந்தும் தானம் செய்யாதவர்கள், வறுமை கண்டு புலம்புபவர்கள். இதற்கு பதிலாக ‘ராமா, கோவிந்தா’ என சொன்னாலே போதும்.