கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோவில் பாதுகாப்பு பணி: விண்ணப்பிக்க அழைப்பு
ADDED :2800 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோவில் பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் ராணுவ வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் செண்பகவள்ளி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, பல்வேறு கோவில்களில், காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களுக்கு, முன்னாள் படைவீரர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். கோவில்களில், தற்போதுள்ள காலிப்பணியிடங்கள், முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. எனவே, 60 வயதிற்குட்பட்ட, முன்னாள் படைவீரர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.