அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2797 days ago
காரைக்குடி:அரியக்குடி, திருவேங்கடமுடையான் கோயில் கும்பாபிஷேக விழா, இன்று (மார்.,26ல்) கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காரைக்குடிக்கும், தேவக்கோட்டைக்கும் இடையே அமைந்துள்ளது திருவேங்கடமுடையான் கோயில் . இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 22ம் தேதி முதல், ஹோமம், சிறப்பு பூஜைகளும், 23 - 25 வரை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. உள்ளன. இன்று (மார்.,26ல்) காலை, 6:18 மணி முதல், 7:18 மணிக்குள், அனைத்து விமானம், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மாலை, 5:00 மணிக்கு, கல்யாண உற்ஸவமும், இரவு, 9:00 மணிக்கு, கருட சேவை புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.