உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கோதண்டராமசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. கோயிலில் 10 நாள் நடைபெறும் பிரம்மோத்ஸவ திருவிழா மார்ச் 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சிறப்பு பூஜைகளும் இரவு 7:00 மணிக்கு மேல் சிம்மம், அனுமந்த், சேஷம், கருடன், கஜம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. முக்கிய விழாவாக சீதாராமர் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். ராமநவமி அன்று சிறப்பு அலங்கரத்தில் தேர் பவனி நடந்தது. ஏற்பாடுகளை கோதண்டராமஸ்வாமி கோயில் தர்மகர்த்தா ஸ்ரீனிவாசராஜா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !