தேனி, மாவட்டத்தின் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை
தேனி:தேனி, மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 6:00 மணியளவில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* தேனி -பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் காலை 9:35 மணிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
மாலை 5:45 மணிக்கு சுவாமி, கம்போஸ்ட் ஓடைத் தெரு, மிராண்டா லைன் மெயின் தெரு, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்டவற்றின் வழியாக வீதியுலா வந்தார்.
* என்.ஆர்.டி., நகர் கணேச கந்தபெருமாள் கோயிலில் காலை 10:30 மணிக்கு மூலவருக்கு பன்னீர், மஞ்சள் நீரால் மங்கள நீராட்டு நடந்தது.
* அல்லிநகரம் பெத்தாட்சி விநாயகர்கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அகிலாண்டேஸ்வரி சமேதஜம்பு கேஸ்வரர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
* கம்பம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்கோயில், கம்பம் வேலப்பர் கோயில், கம்பராயப் பெருமாள் கோயில்,சுருளி அருவி ஆதிஅண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடந்தது. பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய் தனர்.
போடி: சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. முருகன் ,வள்ளி- தெய்வானசிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தேவாரம்: தேவாரம் பாலசுப்ரமணியர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விநாயகர் ஹோமத்துடன் துவங்கி இளநீர், மயில் காவடி சுமந்து ஊர்வலம் சென்றனர். விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் வள்ளி தெய்வானை மகளிர் குழு சார்பில் விளக்கு பூஜை நடந்தது.
சுவாமி வீதிஉலா வந்தார். விழா ஏற்பாடுகளை வேளாளப்பெருமக்கள் சங்க தலைவர் கணேசன், செயலாளர் நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை தீபாராதனை் நடந்தது.
மூணாறு: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.பழையமூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து காலை 7:00 மணிக்கு காவடியுடன்,பால் குடம் எடுத்து வரப்பட்டு, முருகனுக்கு அபிேஷகம், மாலை 6:15க்கு தீபாராதனை நடந்தது. முருகன்,வள்ளி- தெய்வானையுடன் சப்பரத்தில் நகர் வந்தார். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.