சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நிறைவு
ADDED :2789 days ago
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழா, மகா தரிசனத்துடன் நிறைவு பெற்றது. சென்னிமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, தேரோட்டம், பரிவேட்டை, தெப்பத்தேர் நடந்தது. இந்நிலையில் விழா நிறைவு நாளான நேற்று, மகாதரிசனம் நடந்தது. இதையொட்டி காலையில் யாகவேள்வி, விநாகயர் வழிபாடு, கலச ஸ்தாபனம், கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை சமதே உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம், சென்னிமலை முருகன், ராஜா வீதி வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா, நிறைவு பெற்றது.