வால்பாறையில் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்
ADDED :2858 days ago
வால்பாறை;வால்பாறையில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் தின விழா கொண்டாடப்பட்டது.இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மீண்டும் அவர் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான நேற்று வால்பாறை சி.எஸ்.ஐ.,தேவாலயம், ஆர்.சி.சர்ச்., செயின்லுக் சர்ச், ரொட்டிக்கடை புனிதவனத்து சின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும், வழிபாடு மற்றும் திருப்பலியும் நடந்தது.