பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பால்குடம்
ADDED :2787 days ago
பரமக்குடி;பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன்துவங்கி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு கொடியிறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3:00 மணிதொடங்கி காலை 11:00 மணி வரை ஆயிர வைசிய சமூக நலச்சங்கம், ஆயிர வைசிய இளைஞர் சங்கம்,மறுமலர்ச்சி பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், வைகை ஆற்றில் இருந்துபக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தனர். 11:00 மணிக்கு மேல் மூலவர் மற்றும் உற்சவருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், பழச்சாறு,பாலாபிேஷகம் நடந்தது.