பகவதியம்மன் கோவில் திருவிழாவில் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
ADDED :2787 days ago
கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி பகவதியம்மன் கோவில் திருவிழாவில், விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே, மகிளிப்பட்டி கிராமத்தில், பகவதியம்மன் கோவில் திருவிழா கடந்த, மார்ச், 30ல் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.