அழகிரிநாதர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை
ADDED :2748 days ago
சேலம்: சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 25 முதல், ராமநவமி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. பின், அங்குள்ள ஆஞ்சநேருக்கு, 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர். மாலை, கருடசேவை விழா நடந்தது.