ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்திபோட்டு வழிபாடு
ADDED :2748 days ago
இளம்பிள்ளை: ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வீரக்குமாரர்கள் கத்தி போட்டு ஆடியபடி ஊர்வலம் வந்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, மாரியம்மன், காளியம்மன் கோவில்களின் திருவிழாவையொட்டி, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த, 2ல் திருவிழா துவங்கியது. நேற்று காலை, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏரிக்கரை அருகேவுள்ள மாரியம்மன், காளியம்மன் கோவிலிலிருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, ‘ஓம்சக்தி பராசக்தி’ கோஷம் முழங்க, ஏராளமான வீரக்குமாரர்கள், கத்திகளால் உடலை கீறியபடி, ஆடிக்கொண்டு சவுடேஸ்வரி கோவிலை அடைந்தனர். நாளை, ஜோதி ஊர்வலம் நடக்கவுள்ளது.