உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் மூலமந்திர ஹோமம்!

அனுமன் மூலமந்திர ஹோமம்!

காரைக்கால் : காரைக்கால் பார்வதீஸ்வர கோதண்டராமர் கோவிலில் சனிப்பெயர்ச்சி தோஷ நிவர்த்திக்காக பஞ்ச முக அனுமனின் ஒரு லட்சம் மூலமந்திர ஹோமம் நடந்தது. காரைக்கால் புதிய பஸ் நிறுத்தம் அருகில் பார்வதீஸ்வர கோதண்டராமர் கோவிலில், அனைத்து ராசிக்காரர்களுக்கும் தோஷ நிவர்த்திக்காக பஞ்சமுக அனுமன் ஒரு லட்சம் மூல மந்திர ஹோமம் நேற்று முன்தினம் காலை துவங்கியது. கோவிலில் கோண்டராமர், பஞ்சமுக அனுமனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பின் ஹோமம் துவக்கப்பட்டு நேற்று முடிவடைந்தது.பின், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !