கழுமலம் காவல் முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ கழுமலம் காவல் முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக போலீஸ் ஸ்டேஷன் தொடங்கப்பட்டது. அந்த போலீ ஸ் ஸ்டேஷனில் பணியமர்த்தப்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்லும் தங்களுக்கு வழித்துணையாகவும், வழக்குகளை கையாளும் சக்தி வேண்டியும் போலீஸ் ஸ்டேஷ ன் அருகில் உள்ள கழுமலையாற்றங்கரையில் கழுமலம் காவல் முனீஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இன்றளவும் இந்த போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் காவலர்கள் ஆணி மாதம் கழுமலம் காவல் முனீஸ்வரனுக்கு படையலிட்டு வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கழுமலம் காவல் முனீஸ்வரன் சுவாமி கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசால பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை முடிவடைந்து பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்தை வந்த டைந்தது. அங்கு வேத மங்திரங்கள் ஓத, சிவாச்சாரியார்கள் விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடைத்தி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மு ன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ரைட்டர் ரவி மற்றும் போலீசார், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கழும லம் காவல் முனீஸ்வரனை வழிபட்டனர்.