மேட்டுப்பாளையம் மகாகணபதி கோவில் ஆண்டு விழா
ADDED :2754 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிவன்புரம், ஆசிரியர் காலனி ரங்கராஜன் லே --அவுட்டில் ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது. கடந்தாண்டு இக்கோவில் கும்பாபிேஷகம்நடந்தது. ஓராண்டு நிறைவை அடுத்து, ஆண்டு விழா நடந்தது. காலையில் விநாயகர் பூஜை, புண்யாகவாசகம், மஹாகணபதி ேஹாமம், மகாலட்சுமி, நவக்கிரஹ ேஹாமம் ஆகிய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மகா பூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடந்தது.மாலையில் இரண்டாம் கால யாக பூஜையும், பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிேஷக பூஜையும் செய்யப்பட்டது. ராஜ அஷ்ட விமோசன மகா கணபதிக்கும், பிரகதீஸ்வரர், பிரகல்நாயகிக்கும் அலங்காரம் செய்து, சிறப்பு அபிேஷகமும், பூஜையும் செய்யப்பட்டன. விழாவில் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.