நாகேஸ்வரியம்மன் கோவில் விழா:பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
ADDED :2828 days ago
வால்பாறை: வால்பாறையில், பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.வால்பாறை திருவள்ளுவர் நகர் நாகேஸ்வரி, முனீஸ்வரர் கோவில், 15ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில், பக்தர்கள் புதுத்தோட்டம் எஸ்டேட்டில் இருந்து அலகு குத்தி, தீர்த்தம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.