உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரபுரநாதர் கோவில் திருவிழா: சப்தாவரணம் ஊஞ்சல் சேவை

கரபுரநாதர் கோவில் திருவிழா: சப்தாவரணம் ஊஞ்சல் சேவை

வீரபாண்டி: கரபுரநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று சப்தாவரணம் மற்றும் ஊஞ்சல் சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம், உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலில், சித்திரை திருவிழா, மார்ச், 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் மற்றும் நடராஜர் தரிசனம் நடந்தது. நேற்று அதிகாலை, மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சர்வ அலங்காரத்தில், பெரிய நாயகி சமேத கரபுரநாதர் எழுந்தருளிய, சப்தாவரண ஊர்வலம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் தம்பதி சமேதராய் பெரியநாயகி, கரபுரநாதர் எழுந்தருள அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !