உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம் : திருப்பூரை அடுத்த அனுப்பர்பாளையம் புதுார் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ கருப்பராயசுவாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமி, கோவில்களில், பொங்கல் விழா, கடந்த, 25ல் துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணி முதல் கருப்பராயசுவாமி மற்றும் கன்னிமார் சுவாமிக்கு, மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பொங்கலிட்டு சாமிக்கு படைத்தனர். மாலை 4:00 மணிக்கு கருப்பராயசுவாமி, மேளதாளத்துடன் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து, நாட்டிய குதிரை, நடன நிகழ்ச்சி நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இரவு, நண்பர்கள் கலைக்குழு சார்பில், கலை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !