மதுரையில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் விழாக்கோலம் பூண்ட அப்பன்திருப்பதி
மதுரை:மதுரை தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் முன்பு நேற்று முன்தினம் (மே 2)ல் இரவு 2:30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
சித்ரா புவுர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கவும், ஸ்ரீவில்லிப்பு த்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று கொள்ளவும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கள்ளர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் மதுரைக்கு ஏப்.,28 புறப்பட்டார்.
ஏப்., 29 மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. ஏப்., 30 ல் தங்கக்குதிரையில் எழுந்தருளிய அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். மே 1ல் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது.
மே 2 இரவு 11:00 மணிக்கு தல்லாகுளம் சேதுபதி மண்டபம் எழுந்தருளினார். நாளை(மே 5) உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா நிறை வடைகிறது.