உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களிமண்ணே காப்பு!

களிமண்ணே காப்பு!

இரும்புப் பெட்டி, பாதுகாப்பு அறைகள் ஆகியவற்றைப் பூட்டி, அரக்கு சீல் வைப்பதுதான் வழக்கம். ஆனால், மதுரை - அழகர் கோயிலில் கர்ப்பக்கிரகம், தானிய அறை, ஆபரண அறை, மற்ற விக்கிரகங்கள் உள்ள இடங்கள், ஆவண அறைகள் ஆகியவற்றைப் பூட்டி களி மண்ணால் சீல் வைக்கின்றனர். இந்த வழக்கம் எத்தனையோ தலைமுறைகளாகத் தொடர்கிறது. அழகர் கோயிலுக்கு அருகிலுள்ள வலையப்பட்டி எனும் கிராமத்திலிருந்து வெட்டி எடுத்து வரப்படும் இந்த மண்ணை வேறு எதற்கும் உபயோகப்படுத்தக் கூடாதாம். மீறினால் தெய்வக் குற்றமாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !