நிறைவான வாழ்வு தரும் அம்பிகை
ADDED :2740 days ago
தேவர்களை துன்புறுத்திய ஹம்சாசுரனை, திரிபுர பைரவியாக மாறிய பார்வதி, வதம் செய்ய புறப்பட்டாள். விஷயம் அறிந்த அசுரன், சாகாவரம் பெற சிவனை நோக்கி தவம் செய்தான். அவன் எதுவும் கேட்க முடியாமல், ஊமையாகும்படி சபித்தாள் பார்வதி. அதன்பின் அசுரன் மூகாசுரன்’ எனப்பட்டான். மூகன்’ என்பதற்கு ஊமை’ என பொருள். மூர்க்க குணத்துடன் திரிந்த அசுரனை அழித்த பார்வதி மூகாம்பிகை’ என பெயர் பெற்றாள். கர்நாடக மாநிலம் கொல்லூரில் மூகாம்பிகை கோயில் உள்ளது. இங்கு ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி’ ஸ்தோத்திரம் பாடினார். இதற்கு அழகுக்கலை’ என்பது பொருள். அழகின் தாயகமாக விளங்கும் இந்த அம்பிகையை வழிபட்டால் நிறைவான வாழ்வு அமையும்.