சென்னிமலையில் அக்னி நட்சத்திர விழா: முருகனுக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம்
ADDED :2728 days ago
சென்னிமலை: அக்னி நட்சத்திர விழாவை ஒட்டி, சென்னிமலை முருகன் கோவிலில், முருகனுக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் நடந்தது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலில், 35வது ஆண்டு, அக்னி அக்னி நட்சத்திர விழா நடக்கிறது. இதன் மூன்று நாள் விழாவில், நேற்று முக்கிய நிகழ்ச்சியாக, முருகப்பெருமானுக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து வேதிகா அர்ச்சனை, 1,008 கலச அபிஷேகம் மற்றும் ஸ்ரீமஹா ஜெய விஜய ஸ்ரீசுப்பிரமண்ய ஜெப பாராயணம், ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. பிற்பகலில், மகா தீபாராதனை, உற்சவமூர்த்தி புறப்பாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.