நத்தம் அருகே பாதசிறுகுடியில் உள்ள பொன்னர், சங்கர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2733 days ago
நத்தம்: நத்தம் அருகே பாதசிறுகுடியில் உள்ள பொன்னர், சங்கர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம்(மே 24)ல் காலை விநாயகர் வழிபாடு, புண்யாகவாசம், கணபதி, மஹாலட்சுமி மற்றும் நவக்கிரஹ ஹோமங்களுடன் விழா துவங்கியது. மாலை வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று (மே 25)ல் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாடை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பகலில் அன்னதானமும், இரவு புராண நாடகமும் நடந்தது.