ராமநாதபுரம் முருகன் கோயில்களில் வைகாசி திருவிழா
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் வைகாசி திருவிழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வினை தீர்க்கும் வேலவர் ஆலயத்தில் வைகாசி திருவிழா நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு பட்டணம்காத்தான் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு வினை தீர்க்கும் வேலவர் கோயிலை அடைந்தது. வேலவருக்கு 11:30க்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு காவடி, பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
* அழகன்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விழாவையொட்டி, நேற்று காலை 9:05 மணிக்கு காவடியாட்டம், மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 10:45 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசிவிசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரிநிகழ்ச்சி நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் சப்தார்ண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு தீபராதனை நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.