முக்குடியில் 500 ஆடுகள் வெட்டி மாயகுருவிக்கு நேர்த்திக்கடன்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே முக்குடியில் மாயகுருவி சாமாயி அம்மன் கோயிலில் 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள்நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்குடி கிராமத்தில் மாயகுருவி சாமாயி அம்மன் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குஒருமுறை கிடா வெட்டு விழா நடைபெறுவது வழக்கம்.வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் சித்ரா பவுர்ணமியன்று அனைவரும் ஒன்று கூடுவர். திருவிழா நடத்த தீர்மானித்து நாள்குறித்து காப்பு கட்டி விரதத்தை தொடங்குகின்றனர். திருவிழா அன்று 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்று கூடி கோயில்முன் கிடா வெட்டுகின்றனர். கிடாவெட்டி விரதத்தை முடிக்கும் இவர்கள் அங்கேயே சமையல் செய்து விருந்தை முடித்து விரதத்தை முடிக்கின்றனர். இவர்களது பூர்வீக கிராமம் முக்குடி என்றும் தற்போதுமுக்குடி கிராமத்தில் யாரும் வசிப்பது இல்லை,திருவிழா அன்று மட்டும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் பிழைப்பு தேடிவடுகன்குளம், காரியாப்பட்டி, குன்னத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விடுகின்றனர்.நேற்றைய விழாவில் 500க்கும் மேற்பட்டஆடுகளை பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.